நமது சூரியமண்டலத்தில் 6 வது கிரகம் சனியாகும்.கிட்டதட்ட இன்னொரு சூரியமண்டலம் என்று சொல்லும் அளவுக்கு மிகபிரமாண்டமான கிரகமாகும். சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும்.சனி கிரகத்தை தனித்து காட்டுவது அதை சுற்றியுள்ள வளையங்களாகும்.சனிகிரகத்தின் ஒரு ஆண்டு என்பது பூமியில் 29.6 ஆண்டுகளுக்குசமம்.நமது பூமிக்கு1 நிலாதான் ஆனால் சனிகிரகத்திற்கு இது வரை 82 நிலாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. நிலவில் கால்பதித்த மனிதஇனம் அடுத்து செவ்வாய்கிரகத்தில் குடியேற முயற்சித்துவருகிறது .
இந்நிலையில்சனி கிரகத்தின் அருகே இன்னொரு பூமியை போன்ற கிரகம் இருப்பதாய் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே சொன்னதுபோலசனி கிரகமும் ஒரு சிறிய சூரிய குடும்பம் போன்றதுதான். சனி கிரகத்தின் 82 நிலவுகளில் டைட்டன் என்பது பூமியை போலவே தோற்றம் அளிக்கிறது. இந்த டைட்டனை இன்னொரு பூமியாகவே விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்கள்.
ஏனென்றால் இந்த டைட்டனில் பூமியில் இருப்பதாய் போலவே ஆறு, குளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலையும் இருக்கிறது.டைட்டனின் பூமத்திய ரேகைக்கு அருகில் காற்று இருப்பது தெரிய வந்துள்ளது. பூமியில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்த டைட்டனில் இருப்பதால் இதை பூமி 2.0 என்றும் விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.
சூரியமண்டலத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு..!
