• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்பு…

Byதரணி

Dec 20, 2023

தொடர் மழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் மழை வெள்ளத்தால் சூழ்ந்து சிக்கித் தவித்த தமிழ்நாடு அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மூன்று நாட்களுக்குப் பிறகு வெள்ளத்திலிருந்து மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டார்.

தமிழ்நாடு தீயணைப்பு துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின் பெயரில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறை மற்றும் மீட்பு படையினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீட்டனர்.