• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முசிறியில் உலக நலனுக்காக மேல்மருவத்தூர் பக்தர்கள் கோடி அர்ச்சனை

ByJawahar

Feb 21, 2023

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83வது அவதார பெருமங்கல விழாவினை முன்னிட்டு, செவ்வாடை பக்தர்களும், தொண்டர்களும் மிகுந்த உற்சாகத்துடன் உலக நலனுக்காக கோடி அர்ச்சனை செய்ய பல்வேறு பகுதிகளில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து முசிறி தனியார் மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்குத் துவங்கி மதியம் 12 மணி வரை இணையதள ஜூம் இணைப்பு மூலம் உலகெங்கிலும் உள்ள 15 உலக நாடுகளைச் சேர்ந்த 7000-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்களும், பங்காரு அடிகளாரின் தொண்டர்களும் இம்மாபெரும் இணைய வழி கூட்டு வழிபாட்டை நடத்தும் முன்னிட்டு இன்று கின்னஸ் ரெக்கார்டுக்காக நடைபெற்று வரும் இணையவழி கூட்டுப் பிரார்த்தனை முசிறியில் மன்ற பொறுப்பாளர் லட்சுமண சுவாமி உப தலைவி சுஜிதா மற்றும் சிவந்த லிங்கபுரம் மன்ற தலைவி செல்வி ஆகியோர் தலைமையில் கோடி அர்ச்சனை நடைபெற்றது. .
இவ்வழிபாட்டில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற 150 செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்தனர். பின்னர் வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து செவ்வாடை பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.