• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஆந்திரா, தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்..!

Byவிஷா

Feb 20, 2023

ஆந்திரா, தெலங்கானாவில் நேற்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம், கிருஷ்ணா நதி ஆற்றங்கரையோரம் உள்ள சிந்தல பாலம், மேலச்செருவு உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலை 7.25 மணிக்கு 10 வினாடிகள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது பூமி அதிக சத்தத்துடன் குலுங்கியதால் சத்தம் எங்கிருந்து வருகிறது என தெரியாமல் பீதி அடைந்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தன. இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதேபோல் ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் பல்நாடு மாவட்டங்களில் நிலநடுக்கம் நந்திகிராம், கஞ்சிக செர்லா, சந்தர்ல பாடு, வீரபாடு மண்டலங்களிலும், பல்நாடு மாவட்டத்தில் அச்சம்பேட்டை, மாபாடு, சல்லக்கா கிஞ்ச பள்ளி, பளி சந்தலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் காலை 7.25 மணிக்கு சுமார் 12 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது. ரிக்டர் அளவுகோலில் 3. 2 ஆக பதிவாகி இருந்தது.
சமீபகாலமாக ஆந்திரா, தெலுங்கானாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அதுபோன்ற நிலைமை ஆந்திரா, தெலுங்கானாவில் நடந்து விடுமோ என்ற அச்சம் பொது மக்களிடையே பரவியுள்ளது. எனவே புவியியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அடிக்கடி ஏன் நிலநடுக்கம் ஏற்படுகிறது இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தை போக்கும் வழியில் ஆராய்ச்சி செய்து தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.