குமரி மாவட்ட மக்களின் கோரிக்கை யை.கடந்த நான்கு ஆண்டுகளாக புறக்கணிக்கும் ஒன்றிய அரசு மக்கள் பிரதிநிதிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்.
நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில்.குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ்,ஆர்.ராஜேஸ் குமார்.குமரி கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள், ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள், மற்றும் வட்டார தலைவர்கள். காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவு அணித் தலைவர்கள், பெண்கள் அமைப்பினர் என 2000_க்கும் அதிகமாக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் இரயில்வே துறை அமைச்சர்களிடம்.காலம் சென்ற குமரி மக்களவை உறுப்பினர் வசந்தகுமார்,அவரது மரணத்தை தொடர்ந்து,குமரி மக்களவை உறுப்பினரான விஜய் வசந்தும். இரயில்வே துறை அமைச்சர்,அதிகாரிகளிடம் தொடர்ந்து வைத்த கோரிக்கைகள். நாகர்கோவில் சந்திப்பு இரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமை வேளாங்கண்ணிக்கு இரயில் இயங்கவேண்டும்.
ஹைதராபாத் சார்மினார் இரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.தாம்பரம்_நாகர்கோவில் தினசரி இரயில் இயங்கவேண்டும் கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் . ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.நாகர்கோவில் டவுன் இரயில் நிலையத்தை மேம் படுத்த வேண்டும்.காலதாமதகா நடைபெறும் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற குமரி மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளாது காலம் கடந்தும் ஒன்றிய அரசின் பொருப்பின்மைக்கு காரணமாக இருக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ரயில் நிலையம் முன்பு நடை பெற்றது.
விஜய் வசந்த் எம்பி பேட்டி குமரி மாவட்டத்தில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்யும் மக்களுக்கு. நியாயமான உரிமைகளை கொடுக்க கூடாது என்பதே மோடி அரசின் நிலைப்பாடக உள்ளது.எப்போதும் சம்பந்தப்பட்ட அமைச்சர்,அதிகாரிகளை பார்த்து மனு கொடுத்தாலும் முறையான பதிலை சம்பந்தப்பட்டவர்கள் சொல்லுவதில்ல.இத்தகைய நிலையே நீடித்தால்.குமரி மாவட்ட காங்கிரஸ் மக்கள் பிரதிநிதிகள்.மோடி அரசிற்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தை காங்கிரஸ் பேர் இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் என விஜய் வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.