• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மூதாட்டி மீது மோதிச் சென்ற இருசக்கர வாகனம்.!

BySeenu

Mar 17, 2026

கோவை அவிநாசி .ஜி.டி நாயுடு மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் அதிகளவு சென்று வருகின்றன. இந்த நிலையில் ஒரு வயதான மூதாட்டி அந்த மேம்பாலத்திற்கு மேல் சென்று உள்ளார்.

அப்போது அதி வேகமாக வந்த இருசக்கர வாகனம் அந்த மூதாட்டி மீது மோதி, இடித்து தள்ளி விட்டு நிற்காமல் சென்று உள்ளது. இந்த காட்சிகள் பின்னால் வந்த இரு சக்கர வாகனத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. காயம் அடைந்த மூதாட்டி தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இடித்து விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த வயதான மூதாட்டி சற்று மனநலம் சரியில்லாதவர் எனக் கூறப்படுகிறது..