• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு: முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி மரியாதை

Byதரணி

Dec 24, 2023

எம்ஜிஆரின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 36வது ஆண்டு நினைவு தினம் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது. சிவகாசி மாநகராட்சியில் திருதங்கல் ரயில்கேட், குறுக்கு பாதை மற்றும் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு அதிமுக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மலா் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்சியில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்- ராஜவர்மன், மாவட்ட கழக துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சாம் (எ) ராஜா அபினேஷ்வரன், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், மாவட்ட கழக பொருளாளர் தேன்ராஜன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் சீனிவாசப்பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் செல்வம், தலைமை கழக பேச்சாளர் சின்னதம்பி, மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, சிவகாசி முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர்கள் திருமுருகன், காமாட்சி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சங்கர், மாநகர எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கார்த்திக், திருத்தங்கல் கிழக்கு பகுதி 23வது வட்ட கழக செயலாளர் செல்வின், திருத்தங்கல் கிழக்கு பகுதி கழக அவைத்தலைவர் கோவில்பிள்ளை, திருத்தங்கல் கிழக்கு பகுதி எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.