

அ.தி.மு.க., கழக நிறுவனத் தலைவர், தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அவர்களின் 34வது நினைவு தினம் இன்று (டிச.24) அனுசரிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம் எம்.ஜி.ஆர்., திடலில் கழக நகர செயலாளர் வழக்கறிஞர் டி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் எம்.ஜி.ஆர்., திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற நகர செயலாளர் ஞானபிரகாசம், அம்மா பேரவை நகர செயலாளர் சுந்தரபாண்டியன், நகர் கழக பொருளாளர் வீரமணி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் நடேசன், இணைச் செயலாளர் ஆப்பிள் முருகன், இளைஞர் அணி செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் ரங்கநாதன், சிறுபான்மை பிரிவு நகர செயலாளர் அலியால், ஓட்டுனர் அணி செயலாளர் ஜெயப்பிரகாஷ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
