• Sun. Sep 24th, 2023

அக்னிபத் போராட்டம்… டெல்லியில் 3 மெட்ரோ ரயில்கள் மூடல்…

Byகாயத்ரி

Jun 17, 2022

மத்திய அரசு அறிவித்துள்ள 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ பணி வழங்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று முதலாக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்து வரும் நிலையில் பீகாரில் பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உத்தர பிரதேசத்தில் போராட்டத்தில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே வன்முறை வெடித்தது.

இன்றும் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று பீகாரில் ரயிலுக்கு தீ வைத்த நிலையில் இன்று தெலுங்கானாவின் செகந்திரபாத் ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் ரயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். தொடர்ந்து நடந்து வரும் இந்த தீ வைப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் டெல்லி மெட்ரோவின் 3 ரயில் நிலையங்கள் மூடப்பட்டதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது. டெல்லி ஐ.டி.ஒ. மெட்ரோ ரயில் நிலையத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில், டெல்லி கேட், ஜம்பா மசூதியின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *