• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்..,

ByKalamegam Viswanathan

Oct 6, 2023

சோழவந்தான் அருகே, மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
இம் முகாமிற்கு, தொழிலாளர் அணி தலைமைச் செயலாளர் முத்தீஸ்வரன் தலைமை தாங்கினார்.
வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் செல்லப்பாண்டி முன்னிலை வகித்தார்.
தமிழ் முருகன் வரவேற்றார். சோழவந்தான் நகர பொறுப்பாளர் சங்கர், தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கார்த்திகேயன், மாணவர் பாசறை செயலாளர் குணசேகரபாண்டியன் கண்ணுடையாள்புரம் பொறுப்பாளர் அபிநாத் உள்பட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாமில், 50 கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினர்களாக இணைந்தனர்.