புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கொலை செய்தவர்களின் வீடு இந்திரா நகர் பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ளதாகவும் அதனை அப்புறப்படுத்தி அவர்களை காலி செய்ய வைக்க வேண்டும் என நேற்றைய தினம் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புகார் தெரிவித்த பொதுமக்களை காவல்துறையினர் தரக்குறைவாக பேசியதாக கூறி . புதுக்கோட்டை ஆலங்குடி தேசிய நெடுஞ்சாலை கேப்பறை பகுதியில் இன்று இந்திரா நகர் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது பள்ளிக்குச் செல்ல வேண்டியவர்களும் கல்லூரிகளுக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தகவல் அறிந்த கணேஷ் நகர் காவல் ஆய்வாளர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றனர்.. இந்திரா நகர் பகுதி மக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




