• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் தொழுநோய் ஊனத்தடுப்பு மற்றும் புனர்வாழ்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சிங்கப் பூர் மகிழ்ந்து மகிழ் அறக்கட்டளை சார்பாக தொழுநோயாளிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் , இனிப்பு வகைகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இயக்குனர் மலர்லேகா தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பாளர் மோகன் குமார் , நோ புட் வேஸ்ட் இயக்குனர் சிவக் குமார் ஆகியோர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மருத்துவமல்லா மேற் பார்வையாளர் (ஓய்வு)ராஜரத் தினம் வரவேற்றார்.

இந்த முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர் கள் உட்படதொழு நோயாளிகள் கலந்து கொண்டனர். முடிவில்வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந் திரன் நன்றி கூறினார்.