• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெயிலர் 2 ரஜினி ரசிகர்கள் கோவையில் உற்சாகம்..,

BySeenu

Oct 15, 2026

தலைவர் பிறந்தநாளை ‘ஸ்டைல் டே’வாகக் கொண்டாட வேண்டும் ரசிகர்கள் வேண்டுகோள், திருப்பரங்குன்றம் என்றால் முருகன் சாந்தி தியேட்டர் என்றால் ரஜினி ரசிகர்கள் பேட்டி,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் கோவை மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இதையொட்டி, கோவை ரயில் நிலையம் அருகே உள்ள சாந்தி திரையரங்கில் ரஜினி ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் திரண்டு உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தப்பாட்டம் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து ரசிகர்கள் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் எங்களது தலைவர். அவருக்கு என்றும் தனி மவுசு உண்டு. ‘தலைவர் எப்போதும் நிரந்தரம்’ என்பதே எங்களது உணர்வு. ரஜினிகாந்தின் பிறந்தநாளை ‘ஸ்டைல் டே’வாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக, வெளிநாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உருவம் பொறிக்கப்பட்ட பிரத்யேக டி-ஷர்ட்களையும் கொண்டுவந்துள்ளோம்” என்றனர்.
ஜெயிலர் 2 திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு கோவையில் ரஜினி ரசிகர்கள் நடத்திய உற்சாகக் கொண்டாட்டம் திரையரங்குப் பகுதியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.