• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மேலூர் தம்பதிகள் வழக்கு – தனுஷ் பதிலளிக்க கோர்ட் உத்தரவு!

மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதிகள் இருவரும் தனுஷ் தங்கள் மகன் எனவும், அவர் தங்களுக்கான பராமரிப்பு செலவை ஏற்க வேண்டும் எனவும் முன்னதாக மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மேலூர் தம்பதிகளின் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இது தொடர்பாக கூறியுள்ள மேலூர் தம்பதிகள் தனுஷ் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிறப்பு சான்றிதழ் போலியானது என கூறியுள்ளனர். ஆனால், இதற்கும் போதுமான ஆதாரம் இல்லாததால் இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் மீண்டும் மேலூர் தம்பதிகள் மதுரை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் தனுஷின் பிறப்பு சான்றிதழ் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான மனு நீதிபதி இளஞ்செழியன் முன்பதாக விசாரணைக்கு வந்த நிலையில் இந்த மனு தொடர்பாக நடிகர் தனுஷ் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.