மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரிபா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் மனு!
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 25% முதல் 150% வரை உயர்த்தப்பட்டுள்ள சொத்துவரியை ரத்து செய்ய கோரி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர்.பா. சரவணன் மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்.
இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கையில்..தமிழக அரசு வெளியிட்டுள்ள இந்த வரி உயர்வு சாமானிய மக்களை வாடி வதைக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. எனவே இதனை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும், மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க மாவட்ட தலைவர் டாக்டர்.சரவணன் தெரிவித்தார்.