இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்புவின் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தற்போது, நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோரின் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் இன்று காலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சமந்தா நடித்துள்ளதாக ரசிகர்கள் சமந்தாவை பெரிதும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் அளித்திருக்கும் பேட்டியில், காத்துவாக்குல ரெண்டு காதல் கதைக்கும், எங்க காதல் கதைக்கும் தொடர்பு இருக்கு என்று நயனுடனான காதல் குறித்து பேசினார். இதில், நானும் ரவுடி தான் படத்தின் ஷூட்டிங் ஒருபக்கம் சென்று கொண்டிருக்கும்போதே நயனும் நானும் டின்னர் சென்றிருந்தோம். அப்போதுதான் எங்கள் காதல் மலர்ந்த புதுசு என்றார்.
அப்போது, நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த இந்த கதையை நயனிடம் சொன்னேன். மேலும், காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் வரும் கண்மணி ரோலில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டதாகவும். இந்த படத்தை 2016ம் ஆண்டே பண்ண வேண்டிய படம் ஆனால் அடுத்தடுத்து கமிட்மெண்ட்டுகள் இருந்ததால் தள்ளிப்போனது என்றார்.
எங்கள் இருவரின் திருமணத்திற்கு முன்பாக ஒரு நல்லபடத்தை கொடுக்க வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். எங்களின் நீண்ட நாள் கனவு படம் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் அதை கேட்கும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த நேர்காணல் சோஷியல் மீடியாவில் டிராண்டாகி வருகிறது.