• Mon. Nov 4th, 2024

மேலக்கால் சந்தனக்கூடு விழா

ByKalamegam Viswanathan

Oct 7, 2024

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் கணவாய் செய்யது வருசை இப்ராஹிம் சாகிப் ஒலியுல்லா சந்தனக்கூடுக் தர்கா சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு கடந்த 4ம் தேதி வெள்ளிக்கிழமை காலை தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. நேற்று இரவு தர்காவிலிருந்து முத்தவல்லி டிரஸ்டி கணவாய் பிச்சை, செயலாளர் நாகூர் மீரான், பொருளாளர் ஆஸாத் என்ற நாகூர்மீரான், துணை முத்தவல்லி சேட்பஷீர், துணைச் செயலாளர்கள் முகமதுயாசின், செய்யது, நிஜாமுதீன், ஆலோசகர் மவ்லான மவ்லவி முகமதுமன்சூர்அலி நூரி ஆகியோர் முன்னிலையில் சந்தனக்கூடு விழா விடிய விடிய நடைபெற்றது.

இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்பட 20 மாவட்டங்களில் இருந்து இஸ்லாமிய பெருமக்கள் குவிந்தனர். மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த கிராமமக்களும் இந்த சந்தனக்கூடு திருவிழாவில் கலந்து கொண்டனர். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார்,காடு பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலக்கால் ஊராட்சியில் இருந்து சுகாதார பணி மற்றும் கூடுதல் தெருவிளக்கு, குடிநீர் வசதி ஏற்பாடு செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *