• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தொடங்கிய மெகா தடுப்பூசி முகாம்

கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் மெகா தடுப்பூசி முகாம். கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் பலர் பயனடைந்தனர். அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்று தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். அதன்படி, 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், இன்று இரண்டாவது முறையாக மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இந்த முகாமில் 30 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளலாம்.