• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்

Byமதி

Dec 13, 2021

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்கும்.

கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும்.

இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.