• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி நாகர்கோவிலில் பாராளுமன்ற தொகுதி கிழக்கு மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்..,

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி கிழக்கு மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும். மேலும் அவர்கள் கட்சியில் பொறுப்பு இருந்தால் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பது கிடையாது. பதவி இல்லாமலும் வேலை செய்து காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற பாடுபட வேண்டும். கட்சியில் எத்தனையோ தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் மாறும் போது அடுத்த தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் கிழக்கு மாவட்ட தலைவர் உதயம் மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.