

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்த்தர்களுக்கு நிறை புத்தரிசியாக வழங்குவது வாடிக்கை. ஒவ்வொரு ஆண்டும் தை பிறந்ததும் வயல்களில் அறுவடை நடந்து, கழனியில் விளைந்த நெல் வீட்டின் களத்திற்கு கட்டு, கட்டுகளாக வந்து சேரும் தினம். புத்தம் புது கதிர் குலைகளை பக்த்தர்களுக்கு கொடுப்பது, ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலத்தில் ஒரு அடையாளமாக,

சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணு மாலைய சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு நிறை கதிரை கொடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா.ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று,பக்தர்களுக்கு நெற் கதிர்களை கொடுத்தார்.
இந்த நிகழ்வில் கோயில் மேலாளர் ஆறுமுகதான், கணக்காளர் கண்ணன் உட்பட கோவில் பணியாளர்களும் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில், இந்த நிகழ்வு நாளை(ஜனவரி-26)ம் தேதி காலை நடைபெறும்.


