• Sun. Mar 16th, 2025

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டம்..!

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில். இந்த பெயர் வரக்காரணம். இங்குள்ள நாகராஜா கோவில். இந்த கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 18_ம் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் வாகன பவனியும், சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கோவிலில் சுற்று சுவர்,ஆகியவை கற்களால் கட்டப்பட்டது என்றாலும், நாகராஜா கோவிலின் கருவறை ஓலைக்கூரையால் அமைக்கப்பட்டுள்ளது , இந்த கோவிலின் தனி சிறப்பு என்பதை கடந்து, நாகர்கோவில் நாகராஜா கோவிலின் 25_கிலோ சுற்று வட்டார பகுதிகளில் இது வரை பாம்பு கடித்து ஒருவர் கூட மரணம் அடைந்ததே இல்லை என்பதை திலகர் நூலகம் அருகில் பரம்பரையாக வசிக்கும் ஒரு குடும்பத்தை சேர்ந்த முதியவர் சொன்ன ஆச்சரியமான தகவல்.

இன்றைய தேரோட்டத்தில், கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், நாகர்கோவில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம்.ஆர். காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், முன்னாள் தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜன், குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உட்பட ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து தேரை இழுத்தார்கள்.