• Thu. Apr 25th, 2024

மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இருக்ககர வாகன பேரணி!

Byகுமார்

Mar 20, 2022

சாலை விபத்துக்களில் ஏற்படும் தலைக்காயங்களின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்த மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற இருக்ககர வாகன பேரணி
நடைபெற்றது

உவக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை அனுசரிக்கும் வகையில் ரேஸ் கோர்ஸ் சாலையில் தலைக்காயங்களின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும் என்ற விழிப்புனர்வு பேரணி மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மயம் சார்பில் நடைபெற்றது. மதுரை மாநகரின் போக்குவரத் இணை காவல் ஆணையர் ஆறுமுகசாமி இந்த இரு சக்கர வாகன பேரணியை கொடியசைத்து துவத்தி வைத்தார். தலைக்காயம் மீதான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளோடு, தலைக்கவசங்களை முறையாக அணிந்திருந்த 100 – க்கும் அதிகமான இரு சக்கர வாகன ஓட்டிகள் இப்பேரணியில் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இந்நிகழ்விறகு மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூளை நரம்பியல் அனுவை சிகிச்சை துறை தலைவர் மற்றும் முதுநிலை நிபுணர் டாக்டர் கே.செல்வமுத்துக்குமரன் தலைமை வகித்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாக அதிகாரி டாக்டர்.கண்ணன் மற்றும் பொது மேலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மூளைக்காயம் உலகளவில் உயிரிழப்பிற்கு ஒரு முக்கிய காரணமாகிறது. இந்தியாவில் சமசரியாக ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு நபர் தலைக்காயத்தின் காரணமாக உயிரிழக்கிறார் எனவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 20 இலட்சம் நபர்களுக்கு மூளைக்காயங்கள் ஏற்படுகின்றன. அவர்களுள் குறைந்தபட்சம் 0.2 மில்லியன் நபர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் ஏறக்குறைய 10 இலட்சம் நபர்களுக்கு மறுவாழ்வு சிகிச்சைகள் அவசியமாக இருக்கின்றன என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *