• Thu. Mar 30th, 2023

வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு! – அரசாணை வெளியீடு

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, தமிழக அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அரசாணையில், “தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களைச் சார்ந்து வாழும் மகன்கள் மற்றும் மகள்கள் அவர்களின் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் ஆணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் எனவும், மேலும், அரசு ஊழியர்கள் இத்திட்டத்தின்படி இடர்பாடுகள் ஏதுமின்றி பயன்பெற எதுவாக, அவர்களுக்கு உதவிடும் வகையில் தனி தொலைபேசி உதவி மையம் ஒன்று அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 07-09-2021 அன்று விதி 110 இன் கீழ் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில்,அரசுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது”,என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டமானது பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *