• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

என் கனவில் தினமும் கிருஷ்ணர் வருகிறார் – அகிலேஷ் யாதவ் புது ரூட்

உத்திரபிரதேசத்தில் நடைபெற போகும் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அங்கு நான் ஆட்சியை அமைத்து “ராம ராஜ்ஜியத்தை “உருவாக்குவேன் என்று ஒவ்வொரு இரவிலும் கிருஷ்ணர் எனது கனவில் வந்து கூறுகிறார் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.


பாஜகவின் பஹ்ரைச் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான மாதுரி வர்மாவை தனது கட்சியில் சேர்ப்பதற்காக நடந்த நிகழ்ச்சியின் போது உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் இவ்வாறு கூறியுள்ளார். ராம ராஜ்ஜியம் என்பது சமாஜ்வாதியை (சோசலிசம்)நோக்கி செல்லும் பாதையாகும்.சமாஜ்வாதி ஆட்சி அமைந்ததும் ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.