தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அந்த வகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், “பொங்கல் பரிசு தொகுப்புக்கு விவசாயிகளிடமே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும். கரும்புகளை கொள்முதல் செய்யும்போது இடைத்தரகர்களை அனுமதிக்கக்கூடாது. பன்னீர் கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும்.
ஒரு கரும்பின் விலை அதிகபட்சம் 36 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். கொள்முதல் செய்யும் கரும்பு 6 அடிக்கு குறையாமலும், மெல்லியதாக இல்லாமல் சராசரி தடிமனுக்கு கூடுதலாக இருக்க வேண்டும்” என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.