அரசாணை 225ஐ திரும்ப பெற வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
தமிழகத்தில் ஆரம்ப சுகாதா நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கான பணி நேரத்தை காலை8 மணி முதல் மாலை 4 மணி வரை என புதிய அரசாணையை பொது சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக தமிழ்நாடுஅரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர்.செந்தில் தலைமையில் ஏராளமான அரசு மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசின் மருத்துவத்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமான அரசு மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பொது சுகாராத்துறை இயக்குனரின் தன்னிச்சையான முடிவால் அரசு மருத்துவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அரசாணை 225ஐ திரும்ப பெற வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.