• Thu. Feb 13th, 2025

திண்டுக்கல்லில் மருத்துவ சங்கம் ஆர்ப்பாட்டம்!

Byp Kumar

Aug 8, 2022

விடியா தி மு க ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை ஒரு மணி நேரம் உயர்த்தி வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய கூறி தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடந்த மாதம் 25ஆம் தேதி அன்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை என்று முன்பை விட ஒரு மணி நேரம் அதிகரித்து அதற்காக அரசு கருத்துரு சமர்ப்பித்து தற்பொழுது அரசாணை எண் 225 வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவர்கள் ஏற்கனவே பல்வேறு பணிகளுக்கு மத்தியில் பணி புரியும் சூழலில் தற்பொழுது பணி நேரத்தை அதிகரிப்பது மருத்துவர்களிடையே அதிருப்தியையும் கடும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாரத்திற்கு 37.5 மணி நேரம் மட்டுமே பணி செய்கிறார்கள். ஆனால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள அரசாணை மூலம் வாரம் 48 மணி நேரம் மற்றும் கால் ரொட்டி 54 மணி நேரம் எந்த வகையில் பணி செய்ய நேருகிறது. என மருத்துவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் காலை 8 மணிக்கு கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்வதே சிரமம் அந்த நேரத்தில் பேருந்து வசதி போன்றவை கிடையாது. காலை உணவு மற்றும் மதிய உணவு இரண்டையும் எடுத்துச் செல்வது கடினமான பணி ஆகையினால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பணி நேரத்தை அதிகரிக்கும் அரசனை திரும்ப பெற வேண்டும். என்று வலியுறுத்தி இன்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் முன்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாணையை திரும்பப் பெறாவிட்டால் சென்னையை முற்றுகையிட்டு மாபெரும் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.