

நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தி மு க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொன்னாரின் அநாகரிகமான பேச்சுக்கு மேயர் மகேஷ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில். நாகர்கோவிலில் செம்மாங்குடி சாலையில் திமுக சார்பில் தமிழ் நாடு போராடும், தமிழ் நாடு வெல்லும் என்ற தலைப்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மகேஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் தலைமை கழக பேச்சாளர் நெல்லை ரவி, முன்னாள் மக்களவை உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், வழக்கறிஞர்கள் பாலஜனாதிபதி,தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், ஆகியோர் பேசினர்.
நிகழ்வில் பேசிய கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயரும் ஆன மகேஷ் தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், அண்மையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை. திமுகவின் தலைமையகம் அண்ணா அறிவாலைய செங்கலை உருகுவேன் என்ற சொல்லை ஆதரித்து செய்தியாளர்களிடம் பொன்னார் சொன்ன ஆபாச சொல்லை இந்த மேடையில் உச்சரிக்க நாக்கு கூசுகிறது, அந்த அளவுக்கு அநாகரிகமான வார்த்தை. மனைவியோடு வாழ்கிற எந்த கணவனும் நினைத்தே பார்க்காத __ விளக்கு பகுதியை பற்றி பேசியுள்ளார்.
பொன்னாருக்கு நாவடக்கம் அவசியம். பொன்.இராதாகிருஷ்ணன் இனி எந்த காலத்திலும், தலைகீழாக “உசிமுனையில்” தவம் இருந்தாலும் வெற்றி எட்டாக் கனி என பொன்னாரின் பேச்சுக்கு மேயர் மகேஷ் தி மு க வின் சார்பில் கண்டனம் தெரிவித்தார்.

