

தமிழகத்தில் நிலப்பரப்பு குறைந்த மாவட்டங்களில் ஒன்று குமரி மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிலப்பரப்பு,ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில், வனத்தின் நிலப்பரப்பு மட்டும் 48 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உள்ளது.
குமரி மாவட்டத்தில் வனபரப்பில். யானை, சிறுத்தை,கரடி,புலி, மான்,மிளா, காட்டெருமை போன்ற பல வகை வன விலங்குகள் வசித்து வருகிறன. காட்டிற்குள் ஏற்படும் இயற்கை மாற்றங்களினால். குறிப்பாக கோடை காலத்தில் தண்ணீர் தேடி பல காட்டு விலங்குகள் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்து விடுவது கடந்த பல காலங்களில் நடந்திருக்கிறது.

நாகர்கோவிலை அடுத்த பள்ளிவிளை பால் பண்ணையின் அருகில் நேற்று காலை 7 மணி அளவில் (மார்ச்_12)ல். கணியாங்குளம் மலை பகுதி கட்டிலிருந்து வெளியே வந்த மிளா ஒன்று தெருவில் நடந்து சென்றதை பார்த்த மக்கள் அச்சம் அடையாத நிலையில் மிளாவை மீண்டும் காட்டு பகுதிக்கு செல்ல விரட்டிய நிலையில்.மிளா அந்த சாலை ஓரம் இருந்த ஒரு வீட்டின் உள்ளே புகுந்தது அதே இடத்தில் நின்றது.
வனத்துறையினர் மற்றும் தீ அணைப்பு துறையினர் லாவகமாக மிளாவை பத்திரமாக பிடித்ததும். கால் நடை மருத்துவர்கள் குழு மிளாவிற்கு தேவையான முதல் உதவி மருத்துவம் செய்து. மிளாவை பாதுகாப்பாக பொய்கை அணைப்பகுதியில் கொண்டு சென்று காட்டில் விட்டனர்.
வலையில் இருந்து வெளி வந்த மிளா சிறிது நேரம் அதனை காட்டிற்குள் கொண்டு விட்ட மனிதர்களை நன்றியோடு பார்ப்பது போல் நின்று கொண்டிருந்தது. ஊருக்குள் புகுந்த மிளா பற்றி குமரி மாவட்டத்தில் மக்கள் மத்தியில் ஒரு பேச்சு பொருளானது.

