• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் மீண்டும் மாஸ்க் கட்டாயம்

ByA.Tamilselvan

Mar 31, 2023

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்தவமனைகளில் மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என சுகாதாரத்து.துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள்,மருத்துவர்கள் என அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.