ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை காணாமல்போனது சம்பந்தமாக காவல் துறையில் புகார் கொடுத்தது பல்வேறு வதந்திகளையும், யூகங்களையும் ஏற்படுத்தி வருகிறது.
அவரது இயக்கத்தில் தயாராகி வரும் லால்சலாம் திரைப்படத்தில் இருந்து குறிப்பிட்ட சில கலைஞர்கள் வெளியேறிவிட்டது தீவிரமான செய்தியாக மாறிவிடாமல் இருக்க படப்பிடிப்பு தொடங்க இருக்கும் சில நாட்களுக்கு முன்பாக நகை திருட்டு புகார் காவல்துறையில் கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது. இதனால்
லால்சலாம் படப்பிடிப்பு செய்தியை காட்டிலும் நகை திருட்டு செய்தி ஊடகங்களில் விஸ்வரூபம் எடுத்தது.
புகாரில் கூறப்பட்டிருந்த நகை மதிப்பை காட்டிலும் காவல்துறை விசாரணையில் அதிக மதிப்பிலான நகை கைப்பற்றப்பட்டிருப்பது ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் எவ்வளவு நகை இருந்தது அதன் மதிப்பு என்பது கூட முழுமையாக தெரியாமல்புகார் கொடுக்கப்பட்டதா என்கிற கேள்வி எழுந்து மனுவின் நம்பகதன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் அவர் ஏற்கனவே காவல் நிலையத்தில் தற்போது 200 சவரன் நகை காணாமல்போனதாக புதிய புகார் மனுவை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகைகள் ,வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை திருடு போய்விட்டதாக சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக அவரது வீட்டில் வேலை செய்து வந்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுனர் வெங்கடேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் சமீபத்திய வங்கி பரிவர்த்தனை மூலம் அவர் நகைகளை திருடியது உறுதியானது.
சுமார் 110 பவுன் வரை நகைகள் திருடி உள்ளார்கள் என விசாரணையில் தெரியவந்தது.நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தன் லாக்கரில் இருந்து 3.60 லட்சம் மதிப்பிலான நகைகள் மாயமானதாக புகார் அளித்திருந்தநிலையில், வீட்டு பணிப்பெண்ணிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான 100 சவரன் நகைகள், 30 கிராம் வைரம், 4 கிலோ வெள்ளி, 95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலப்பத்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனால், மற்ற நகைகள் குறித்து அப்பெண் மற்றும் கார் ஓட்டுனரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்லாக்கரில் இருந்து திருடு போன நகைகள் எவ்வளவு என்பது அறியாமல், ஏன் குறைத்து மதிப்பிட்டு புகார் அளித்தார்’ என, ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த, போலீசார் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 200 சவரன் நகைகள் கொள்ளை போனதாக மீண்டும் புதிய புகார் ஒன்றை காவல் துறையிடம் அளித்துள்ளார். ஈஸ்வரியிடம் இருந்து இன்னும் 50சவரன் நகைகள் கைப்பற்றபப்பட வேண்டும் என காவல் துறை சார்பில் கூறப்படுகிறது.