• Fri. Mar 29th, 2024

மறவபட்டி அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மறவப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான பிற்காலப்பாண்டியர் காலத்தில் உருவான அழகுமலையான் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

12 ஆண்டிற்கு ஒருமுறை கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவேண்டும் என்ற ஆன்மீக விதிப்படி கடந்த பல ஆண்டுகளாக விழா நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது கிராம மக்களால் பழமையாக இருந்த இக்கோயில் சீரமைக்கப்பட்டு தெய்வச்சிலைகளுடன் கலைநயத்துடன் சிறப்பாக அமைக்கப்பட்ட முன்மண்டபத்துடன் விரிவுபடுத்தப்பட்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் முதல் நாளான நேற்று காலை கணபதி ஹோமத்தில் துவங்கி கடம் யாகசாலை புறப்பாடாகி மகாதீபாராதனை நிகழ்ச்சி முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

இரண்டாம் நாளான இன்று அதிகாலை விக்னேஸ்வர பூஜையில் துவங்கி இரண்டாம் கால யாகவேள்வி ஆரம்பிக்கப்பட்டு கடம்புறப்பாடாகி அழகுமலையான் கோயில் விமான கலசத்தில் புனிதநீரால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் துணைபரிவார தெய்வங்களான மகாகணபதி, முருகன், கருப்பண்ணசாமி மற்றும் நவக்கிரகங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டது.

ஆகமவிதிப்படி 48 நாட்கள் ஒருமண்டலகாலம் விரதமிருந்த கட்டளைதாரர்கள் கைகளில் காப்புக்கட்டி 108 புண்ணிய தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது . விழாவில் தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *