• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பரோட்டாவுக்கு என்டு கார்டு போட்ட பல நாடுகள்… இந்தியாவில் எப்போது..??

ByAlaguraja Palanichamy

Jul 6, 2022

பரோட்டா எல்லோரது வாழ்விலும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் பல வகையான பரோட்டாக்களை செய்து உணவு ப்ரியர்களை கவருகின்றனர். ஆனால் இந்த பரோட்டா உடலுக்கு நல்லதா..? இல்லை கெட்டதா..? இதை தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

மேற்கித்திய நாடுகளான சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் பரோட்டாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது தடைச் செய்யப்பட வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர்.

பரோட்டா உருவான வரலாறு

இரண்டாம் உலகப் போர் 1939ன் இறுதியில் உணவுப் பஞ்சமும், பட்டினியும் ஏற்பட்டது. உணவு கிடைக்கவில்லை இதனால் குறைந்த செலவில் வயிறு நிரம்பிய உணவைத் தரும் உணவைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மைதா மாவில் செய்யும் பரோட்டாவைக் கண்டுபிடித்தனர். பசியை நீக்கினாலும் பரோட்டா கெடுதல் என்னும் விழிப்புணர்வு அன்றே ராணுவ வீரர்களுக்கு இருந்தது. அதனால் தான் ‘ ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா நம்ம உசுரை வாங்குமா புரோட்டா?’ என்ற பாடல் உலகப் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களிடம் பிரபலமாக இருந்தது.

நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதில் பென்சாயில் பெராக்சைடு( benzoyl peroxide ) எனும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்கபடுகிறது. இது மைதா என அழைக்கப்படுகிறது. பென்சாயில் பெராக்சைடு என்னும் இரசாயனமானது நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ளது. இந்த ரசாயனம் புரதத்துடன் (protein) இணைந்து நீரிழிவு நோய்க்கு( diabetes ) மிக முக்கிய காரணியாய் அமைகிறது.

மேலும் மாவை மிருதுவாக மாற்றுவதற்காக அலாக்சான்( alloxan) என்னும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அலாக்சான் என்பது ஆராய்ச்சிக் கூடத்தில் எலிகளில் நீரிழிவு நோயை உண்டாக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும் மைதாவில் நார்ச்சத்து கிடையாது. நார்ச்சத்து இல்லாத உணவு நமது ஜீரண சக்தியை குறைத்து விடும். எனவே மைதாவில் செய்யப்படும் பொருட்கள் நமது உடலுக்கு ஏற்றவை அல்ல. அவை செரிமான பிரச்சனைக்கும் வழிவகுக்கும். இதில் குறிப்பிடும்படியான ஆரோக்கியத்திற்கு உகந்த சத்துக்கள் எதுவும் இல்லை.

விலங்குகளுக்கான உணவு மைதா.. மனிதர்கள் உண்ண தடை

பரோட்டா, நம் பாரம்பரிய உணவு இல்லை; பாரசீக நாட்டு உணவாகும். ஆரம்பத்தில், இது வீட்டில் வளர்க்கும் விலங்குகளுக்கான உணவாக இருந்தது. மைதா மாவை வேக வைத்து கவனமாக உருட்டி, வண்டி இழுக்கும் குதிரைகளுக்கும், பொதி சுமக்கும் கோவேறு கழுதைகளுக்கும் உணவாக வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு உணவு கொடுத்தால் போதும், பிறகு இரண்டு நாட்களுக்கு உணவு கொடுக்கத் தேவையில்லை. இதில், கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதால், பன்றிகளுக்கும் உணவாக கொடுக்கப்பட்டது. காலப்போக்கில் இதில் ரொட்டி தயாரித்து மனிதர்களும் சாப்பிடத் துவங்கினர். மைதா மாவுடன் நலசான் என்பன Chemical பிளீச் செய்யப் பயன்படும் பென்சாயில் பெராக்சைடு வேதிப்பொருளுக்குச் சீனா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மரவள்ளிக் கிழங்கிலிருந்தும் மைதா தயாரிக்கப்படுகிறது

மைதாவால் ஏற்படும் தீமை

மைதா உணவைச் சாப்பிடுவதால் இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதோடு, கொழுப்பு படிதல், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்கள் இளம் வயதிலேயே வரும் என்பதும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இன்று சர்க்கரைநோய், உடல் பருமன் போன்ற தொற்று நோய்கள் அதிகரித்திருப்பதற்கு, பல்வேறு காரணங்களோடு, பரோட்டாவையும் ஒரு காரணமாகச் சொல்லலாம். சத்துகள் ஏதுமில்லாத, வெற்று கலோரிகளை மட்டுமே கொடுக்கும் மைதாவின் குழந்தையான பரோட்டா, உடல் எடையைக் கூட்டும். அதுவும் குழந்தைப் பருவம் முதலே பரோட்டாவுக்கு ரசிகராக இருப்பவர்களுக்கு இளம் வயதில் உடல் பருமன் நிச்சயம்.

இதற்கு முடிவு அரிசி, கம்பு, கேழ்வரகு, திணை, குதிரைவாளி மற்றும் சோளம் போன்ற மனிதனால் காடுகளில் விவசாயம் செய்யும் வேளாண் குடிகளான இந்திர குல சத்திரியர், தேவேந்திர குல வேளாளர், வன்னியர் சத்திரியர், பிள்ளைமார் மற்றும் கவுண்டர் சமுகம் இன்னும் அதிகப்படியான சமுதாய மக்கள் விவசாயம் செய்து வருகின்றன. இது உடலக்கு நன்மை தரக்கூடிய உணவு, தானியங்களை பயிரிட்டு வருங்கால சந்ததிகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த உணவுகள் அனைத்தும் உடலுக்கு எந்த வகையிலும் தீங்கு கிடையாது. பரோட்டா என்பது ஒரு அரேபியன் உணவு கூடுமானவரை எதிர்காலத்தில் உடல் பருமன், நீரிழிவு நோய், ஆண்களுக்கு கணையம் சுரக்காமல் வேலை செய்யாமல் போவது, ஆண்மை குறைவு ஏற்படுவது ,விந்தணு நீர்த்து போகுதல் மற்றும் இதய நோய் வராமல் தவிர்க்கவும் எதிர்காலத்திற்கு சிறந்தது.

எனவே, இந்தியாவில் வாழும் மனிதர்கள் பல ஆண்டுகாலம் வாழ நினைத்தால் இந்த பரோட்டவுக்கு தடை விதித்து சத்துள்ள ஆகாரம் எடுத்துக்கொள்வது வருங்காலத்தை காப்பாற்றும்.அதனால் நாம் அனைவரும் பரோட்டாவுக்கு “நோ” சொல்லுவோம். இந்தியாவிலும் இதற்கு தடைக்கோருவோம்…