உதகமண்டலம் பிரீக்ஸ் பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா போட்டிகள் நீலகிரி மாவட்ட அளவில் நடைபெற்றன. இப்போட்டியில் மேற்கத்திய நடனம் மற்றும் ப்ரிஸ்டைல் (FREESTYLE) நடனப் போட்டியில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 10 ம் வகுப்பு மாணவிகள் ஆடிய நடனம் மாவட்டம் அளவில் முதலிடம் பிடித்து டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ள மாநில அளவில் நடைபெறும் நடனப் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் இரண்டு நடனப் போட்டியில் 15 மாணவிகள் சு.கீர்த்திஷா, செ.ஹம்சினி, ஈ.இலக்கியாதேகி, ச.மோனிஷா, ஶ்ரீநிஷா, எஸ்.ஜெயஶ்ரீ , ம.சௌபர்ணிகா, லக்கிதா, சஞ்சனா, ஆர்.காயத்திரி, எஸ். ரக் ஷிசிதா , வர்ஷினி, பிரதிக் ஷா , மதுமிதா ஆகிய மாணவிகள் கோவையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு செல்லவிருக்கின்றனர்.
இவர்களை பள்ளித் தலைமை ஆசிரியர் பீ.ரவிக்குமார் உடற்கல்வி ஆசிரியர் ரா.சவிதா மற்றும் ஓவிய ஆசிரியர் அ.சகாயதாஸ்,பே.ராஜ்மோகன், ஆகியோர் மாணவிகளை ஊக்கப்படுத்தி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.மேலும் அனைத்து ஆசிரியர்களும் மாணவிகளை பாராட்டினார்