
கரூர் மாவட்டம், சேலம் பைபாஸ் ரோடு அருகில், வணிக வளாகத்தில் இயங்கி வந்த The Green Farms and Poultry and Green Field Poultry India Pvt. Ltd. என்ற நிதி நிறுவனத்தில் 113 முதலீட்டாளர்கள் முதலீடு செய்த ரூ. 3 கோடியே 6 லட்சத்து 49 ஆயிரத்து 734 ரூபாய் டெபாசிட் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி மோசடி செய்த நிதி நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கரூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் குற்ற எண்: 01/2022 U/s 406, 420, 120(B) IPC & 5 of TNPID சட்டப்பிரிவின் கீழ் 20.09.2012 தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து நிதி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது மதுரை முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் அனைத்து விசாரணைகளும் முடிக்கப்பட்டு நிதி நிறுவனத்தின் உரிமையாளர் திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி அடுத்த பூசாரிபாளையத்தை சேர்ந்த தமிழ்வாணன் (33) என்பவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,03,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழ்வாணன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
