
கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் தாகம் தீர்க்கும் வசதிக்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் கோவில் அருகே நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

அதனை இன்று காலை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். உடன் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டல தலைவர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
