• Sun. Jul 19th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வெளிநாட்டு ரூபாயை மாற்றுவது போன்று, வெளிநாட்டு பணத்தை திருடி தப்பிய நபர் கைது

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

மதுரை நேதாஜி சாலையில் செயல்பட்டு வரும் தனியார் (SRS Forex) வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் மாற்றும் மையத்தில் ஈரான் நாட்டு பணத்தை மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணத்தை திருடி சென்றதாக அந்நிறுவனத்தார் கொடுத்த தகவலின் பெயரில் மதுரை திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய வந்த நிலையில் தப்பிச் சென்ற நபர் நாகர்கோயில் பகுதியில் இதே போன்று வெளிநாட்டு பணத்தை மாற்றுவது போன்று அங்கிருந்த பணத்தை திருட முயற்சி செய்தபோது அங்கிருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து நாகர்கோவில் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் டெல்லி, மார்க்கெட் சவுத் பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பது தெரிய வந்தது தொடர்ந்து அவரை நாகர்கோவில் போலீசார் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்ததன் பேரில் முகமது அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.