• Wed. Apr 24th, 2024

தாஜ்மஹாலை விஞ்சிய மாமல்லபுரம்…

Byகாயத்ரி

Oct 1, 2022

இந்தியா முழுவதும் வரலாற்று சிறப்புமிக்க பல சுற்றுலா தளங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகள் பலர் இந்த பகுதிகளை காண ஆண்டுதோறும் அதிக அளவில் வந்தபடி உள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வரத்து வெகுவாக குறைந்தது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. கடந்த 2021-22ல் அதிகமான வெளிநாட்டு பயணிகள் சுற்றி பார்த்த சுற்றுலா தளங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் இந்தியா வந்த வெளிநாட்டு பயணிகளில் 45.5% (1,44,984 பேர்) மாமல்லபுரத்தை பார்வையிட்டுள்ளனர். தாஜ்மஹாலை பார்த்தவர்கள் 12.21% (38,922) மட்டுமே. தாஜ்மஹாலுக்கு இணையான வெளிநாட்டவர்கள் (25,579 பேர்) சாளுவன்குப்பம் புலிக்குடைவரையை பார்வையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *