• Thu. Oct 1st, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மகாராஷ்டிரா முதலமைச்சர் ராஜினாமா இல்லை

ByA.Tamilselvan

Jun 22, 2022

மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்யவுள்ளதாக செய்திகள் வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்யமாட்டார் என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே 40 அதிருப்தி எம்எல்ஏக்களுடன் அசாம் தலைநகர் கவுகாதியில் முகாமிட்டுள்ளார். இதனால் உத்தவ்தாக்கரே அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இந்தசூழலில் அமைச்சரவை கூட்டத்தில் தனது ராஜினாமாவை உத்தவ் தக்கரே அறிவிக்க உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில்
மகாராட்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திரும்பி வரும் வரை முதலமைச்சர் ராஜினாமா தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு சஞ்சய் ராவத் பதில் தெரிவித்துள்ளார்.