மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற பழமையான ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த 1ந் தேதி கொடியேற்றத்துடன் பக்தர்கள் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது.

அதனை தொடர்ந்து திருக்கோவில் முன்பாக கும்மி பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மிக விமர்சியாக சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய பால் அம்மனுக்கு மனம் குளிர பாலபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வு திருவிளக்கு பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சாஸ்தா அப்பளம் உரிமையாளர் மணிகண்டன் நீர் மோர் தண்ணீர் பழம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.