• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பல்லடம் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி விழா

ByS.Navinsanjai

Feb 19, 2023

பல்லடம் சித்தம்பலத்தில் உலகின் பிரசித்தி பெற்ற முதல் கோளறு பதி நவகிரக சிவன் கோட்டை கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா நடைபெற்றது .சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள், அன்னதானம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சித்தம்பலத்தில் உலகின் முதல் பிரசித்தி பெற்ற கோளறுபதி நவகிரக சிவன் கோட்டை கோவில் அமைந்துள்ளது. கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் செயல்பட்டு வரும் இக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அலங்கார அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றை கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் நடத்தி வைத்தார். அதனைத் தொடர்ந்து பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பக்தகோடி பெருமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானகுரு நற்பணி மன்றத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தீயணைப்பு மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.