• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சிதம்பரேஸ்வரர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்..,

ByK Kaliraj

Mar 8, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத சிதம்பரீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவிலாகும்.

இக்கோவிலில் கடந்த 2000 ஆண்டு திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் 25 ஆண்டுகள் கழித்து இன்று திருக்குடமுழுக்கு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத் திருவிழா நிகழ்ச்சியானது கடந்த 5ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி தினமும் காலை மாலை என இருவேளையில் பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் விக்னேஷ்வர பூஜை பூர்ணயபாகசங்களும் நான்காம் காலப்பூர் யாக பூஜை மகாபூர்ண பகுதி தீபாராதனை யாத்ரா நாளும் கலசங்கள் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அருள்மிகு சிவகாமி அம்பிகா சமேத சிதம்பரேஸ்வரர் விமானத்தில் மற்றும் சிவகாமி அம்பிகா சமய சிதம்பரீஸ்வரர் மூல ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

கலசத்தில் புண்ணிய தீர்த்தம் போற்றப்பட்டு அதன் பின்னர் தீர்த்தம் மக்களுக்கு தெளிக்கப்பட்டது. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜா பட்டர் குழுவினர் நடத்தி வைத்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சி சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு சிவனையும் சிவகாமி அம்மையாரையும் வழிபட்டுச் சென்றனர். கும்பாபிஷேகத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பல்வேறு இடங்களை அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சாத்தூர் நகர் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.