• Thu. Apr 25th, 2024

மதுரை – தேனி புதிய அகல ரயில்பாதை திட்டம் – பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

ByA.Tamilselvan

May 27, 2022

மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே புதிய அகல ரயில் பாதை திட்டம் – பிரதமர் மோடி துவங்கி வைத்தார்
மதுரை தேனி ரயில் நிலையங்களுக்கு இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ள் நிலையில் இந்த புதிய அகல ரயில் பாதை திட்டத்தை பாரத பிரதமர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் . மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்திற்காக கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை ரூபாய் 445.46 கோடி செலவிடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக மதுரை – தேனி இடையேயான புதிய அகல ரயில் பாதை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் புதிய ரயில் பாதையை பாரத பிரதமர் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார் .மதுரை -தேனி ரயில் பாதை என்பது 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக மதுரை சந்திப்பில் நடைபெற்ற விழாவில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் , முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி , பூமிநாதன் மற்றும் திமுக அதிமுக பாஜக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என் பலர் கலந்து கொண்டனர் . புதிய ரயில் பாரத பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று வெள்ளி கிழமை முதல் வழக்கமான ரயில் சேவை துவக்கப்படும் என்றும் மதுரை தேனி இடையே ரயில் கட்டண விவரங்களையும் தெற்கு ரயில்வே ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
மேலும் , மதுரை முதல் தேனி வரை உள்ள வழியோர ஊர்பகுதி மக்கள் , மாணவர்கள் , அரசு , தனியார் வேலைக்கு செல்வோருக்கும் உதவிகரமாக இருக்கும் என்பதாலும் குறைந்த கட்டணத்தில் ஏலக்காய் உள்ளிட்ட விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு வரவும் மதுரையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு அவைகளை எடுத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருக்கும் என்பதாலும் புாரத பிரதமர் துவக்கி வைத்துள்ளார். மதுரை தேனி அகல ரயில் சேவை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மதுரை – தேனி நகரங்களுக்கு இடையே பேருந்து பயண நேரம் மற்றும் கட்டணம் ஆகியவற்றை விட ரயில் பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவு என்பது குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *