• Sun. May 5th, 2024

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க முதல்வருக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும் என மதுரை தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டத்தில் தீர்மானம்

Byகுமார்

Mar 2, 2024

மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், வைகை வடகரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றதுஇந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை மண்டல தலைவர் மைக்கல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் வழக்கறிஞர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல இளைஞர் அணி தலைவர் சிவா வரவேற்றார் இந்த கூட்டத்தில் வணிகர் சங்க மதுரை மண்டல நிர்வாகிகள் ஏராளமானேnர் கலந்து கொண்டனர்இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை மாநில செயலாளர் குட்டி(என்ற)அந்தோணிராஜ் செய்திருந்தார் மாநில தலைவர் முத்துகுமார் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஆலோசனை கூட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர் சந்திப்பில் மாநில தலைவர் முத்துக்குமார் கூறியது கோவையில் நடைபெறும் 41-வது வணிகர் தினத்திற்கு வணிகர் தின பாதுகாப்பு மாநாடு என பெயர் சூட்டப்பட்டுள்ளதுஎனவும் சமீப காலங்களாக வணிகர்களை அச்சுறுத்தி நடைபெற்ற சம்பவங்கள் மிக அதிகம் அதிகாரிகள் என்ற போர்வையிலும் அரசியல் என்ற போர்வையில் சமூக விரோதிகள் என்ற போர்வையின் மூலமாக சுய தொழில் செய்கின்ற மனிதர்கள் விரட்டப்படுகின்றார்கள் அதற்கான பாதுகாப்பு மாநாடு எனவும் இலவசம் வந்த பிறகு சுயதொழில் செய்பவர்கள் பாதிப்படைகின்றனர் எனவும் ஜிஎஸ்டி செலுத்துகின்ற நடுத்தர வணிகர்களுக்கு ஐம்பது லட்சம் இன்சூரன்ஸ் சிறு தொழில் வியாபாரிகளுக்கு 25 லட்சம் இன்சூரன்ஸ் அரசு வழங்க வேண்டும் எனவும்போதையில்லாத தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு உரிய நவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மதுரை மண்டலத்தின் சார்பாக முதல்- அமைச்சருக்கு ‘மிஸ்டுகால்’ கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
ரவுடிகளிடம் இருந்து வியாபாரிகளை பாதுகாக்க வியாபாரிகளுக்கு தனியாக பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் இந்த வணிகர் தின மாநாட்டிற்கு சுதேசி வணிகர்களான ஆன்லைன் வர்த்தகத்தின் மீறி தன்னம்பிக்கையின் மூலம் வெற்றி கொடி நாட்டிய பெரும் வணிகர்களை அழைத்து கவுரவிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *