


அதிமுக மதுரை மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் மற்றும் பகுதி கழகச் செயலாளர் இன்று தேமுதிக தலைமை கழக கட்சி அலுவலகத்தில் வந்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், முன்னிலையில் தன்னை அதிமுகவில் இருந்து தேமுதிகவில்இணைத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் உயர்மட்ட குழு பாலன் மாநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் மணிகண்டன், மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வகுமார் உடன் இருந்தனர்.

