• Fri. Apr 19th, 2024

மதுரை மெட்ரோ ரயில் பணிகள் 2026ல் முடிய வாய்ப்பு-இயக்குனர் சித்திக் பேட்டி

Byp Kumar

Apr 6, 2023

மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி 2026 முடிய வாய்ப்பு- ஜூன் சித்திரைத்திருவிழா தேரோட்டத்துக்கு பாதிப்பில்லாமல் மரங்களை வெட்டாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்.
மதுரையில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் பேட்டி.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது.மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான ஆலோசனைக்கூட்டம் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் மு.அ.சித்திக் கலந்து கொண்டார். மேலும் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள், ஆர்.வி கன்சல்டன்ட் அதிகாரிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மற்றும் போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ஆறுமுகசாமி, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் பத்மநாபன் மற்றும் நில அளவை, குடிநீர் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மெட்ரோ ரயில் வழித்தட விவரங்கள் குறித்த மேப் மற்றும் புகைப்படங்கள், ரயில் நிறுத்த நிலையங்கள், மேம்பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள், பூமிக்கு அடியில் டனல் அமைப்பது குறித்து ஆர்.விகன்சல்டன்ட் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.இதில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் மெட்ரோ ரயில் வழித்தட வரைப்படங்களை காட்டி அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் அ.மு.சித்திக் பேசுகையில்,


மதுரையில் மெட்ரோ திட்டம் 8,500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டிபிஆர் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும் பணியானது தற்போது துவங்கி உள்ளது.முதல் கட்டமாக திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை சுமார் 31 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது.ஒத்தக்கடை டூ திருமங்கலம் 25 கிலோமீட்டர் மேல் பகுதியிலும், ஐந்து கிலோமீட்டர் சுரங்கப்பாதையிலும் செல்லும் வகையில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.மெட்ரோ ரயில் நிறுத்தம் 14 நிலையங்கள் மேல் தளத்திலும், 4 நிலையங்கள் தரை தளத்திலும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை ஜூன் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 2024 மே அல்லது ஜூன் மாதத்திற்குள் அனுமதி பெற்று பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது.2024 டிசம்பர் மாதத்தில் கட்டுமான பணி துவங்கி 2027 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.60% நிதி நிறுவனங்கள் நிதியும், 20% மாநிலம்,20% மத்திய அரசு நிதி உடன் திட்டம் செயல்படுத்தப்படும்.
மதுரை என்பது ஒரு பாரம்பரிய தொல்லியல் நகரம் ஆகையால் கோவிலை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் சுரங்கப்பாதை மூலம் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.சுரங்கப்பாதை அமைப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது, இருப்பினும் விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இன்னும் ஓரிரு வாரத்தில் மதுரை மாநகரில் மெட்ரோ வழித்தடம் அமைய உள்ள பகுதிகளில் 500 மீட்டருக்கு ஒரு இடத்தில் சர்வே பணி துவங்கும்.மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.தொடக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் வரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் வரும் வகையில் வடிவமைக்கப்படும்.ஐந்து கிலோ மீட்டர் சுரங்கப்பாதையில் 20 மீட்டர் ஆழத்தில் இரண்டு சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும்என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *