• Wed. Dec 11th, 2024

திருமங்கலம் அருகே நுங்கு வண்டி பந்தயம்

Byவிஷா

Apr 6, 2023

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தங்களாசேரி கிராமத்தில் காளியம்மன் முத்தாலம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவில், சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.
5 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இந்த விழாவில், கிராமத்து போட்டிகளில் ஒன்றான நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிறுவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று பரிசுகளை பெற்றுச் சென்றனர்.