• Thu. Apr 25th, 2024

நம்ம செஸ்.., மாஸ் பாடலை வெளியிட்ட மதுரை ஆட்சியர் அனிஷ்சேகர் !

Byகுமார்

Jul 16, 2022

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தப் போட்டியில் 180-க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஒலிம்பியாட் ஜோதி செல்கிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதியன்று வருகை தர உள்ள நிலையில் ஒலிம்பியாட் ஜோதிக்கு மதுரை மீனாட்சியம்மன் கோவில் நான்கு சித்திரை வீதி மற்றும் தெப்பக்குளம் பகுதியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியையொட்டி மாவட்டத்திலௌ ஒரு வாரம் தொடர்ச்சியாக செஸ் போட்டி, ஓவியப்போட்டி, வினாடி- வினா, ரங்கோலி கோலப்போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இப்போட்டிகளில் முகக்கவசம் அணிந்து, கொரானா கட்டுப்பாடுகளோடு பொதுமக்கள் கலந்து கொள்வது உறுதி செய்யப்படும் என ஆட்சியர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.தொடர்ந்து கானா பாடகர் மதிச்சியம் பாலா பாடி தயாரிக்கப்பட்டுள்ள நம்ம செஸ், மதுரை மாஸ் எனும் செஸ் ஒலிம்பியாட் பாடலை ஆட்சியர் அனிஷ்சேகர் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் சித் சிங் காலோன், வருவாய்த்துறை, மாணவ, மாணவிகள் ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *