• Tue. Feb 18th, 2025

ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாது

ByA.Tamilselvan

Jul 17, 2022

ஓ.பன்னீர் செல்வம் குறித்த உண்மைகளை தெரிவித்தால் தலை காட்ட முடியாத நிலை ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- . ஓ.பி.எஸ்.யின் வரலாறும், என் வரலாறும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். நான் சொத்து சேர்த்துள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் மிரட்டி பார்க்க வேண்டாம். திறந்த கதவோடு எத்தனை சோதனைக்கும் நான் தயாராக உள்ளேன். ஓ.பி.எஸ். வீட்டிலும், எனது வீட்டிலும் சொத்து குவிப்பு குறித்து லஞ்ச ஓழிப்பு துறை ஓரே நேரத்தில் சோதனை நடத்தி எனது வீட்டில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக கண்டறியப்பட்டால் நான் பொது வாழ்க்கையிலிருந்து விலகிவிடுறேன். அவர் சொத்து குவித்ததாக அறிந்தால் ஓ.பி.எஸ். பொது வாழ்க்கையில் இருந்து விலக தயாரா? நான் கட்சி நலனுக்காகவும், எதிர்காலத்திற்காகவும் பேசி வருகிறேன். என்னை மிரட்டி பார்க்கும் ஓ.பி.எஸ். குறித்த பல உண்மைகளை வெளியிட்டால் ஓ.பி.எஸ். வெளியே தலை காட்ட முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.